முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு: லோயர்கேம்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:  லோயர்கேம்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு
x

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்பில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது

தேனி

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நேற்று வரை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,789 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.

இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 161 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 166 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


Next Story