திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கூடுதல் போலீஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

தமிழகம் முழுவதும் வருகிற 2-ந் தேதி காந்திஜெயந்தியன்று நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வேன் மூலம் பாதுகாப்பு பணிக்காக புறப்பட்டு சென்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story