அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி தகவல்


அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி தகவல்
x

சமூக நீதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1,07,299 இடங்களில் சேர்வதற்காக மாணவர்களிடம் இருந்து 2,46,295 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் தற்போது வரை 80,084 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% இடத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

அதே போல் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரித்துக்கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நீதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜூன் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.




Next Story