வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்ய 2,303 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் புதுக்கடையில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்ய  2,303 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள்  புதுக்கடையில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்ய 2,303 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. புதுக்கடையில் நடைபெற்ற முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்

2023-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை பெறப்படுகிறது. இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முதற்கட்டமாக கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக நேற்று சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், கடலூர், திட்டக்குடி, பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2303 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

சிறப்பு முகாம்

அந்த வகையில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 227 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய முகாம், மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை இணைத்துக் கொண்டனர்.

மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூருக்கு இடம் பெயர்ந்தவர்கள், வார்டுகளுக்குள் இடம் பெயர்ந்தவர்கள், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆர்வமுடன் சென்று விண்ணப்பித்தனர்.

கலெக்டர் ஆய்வு

கடலூர் அருகே புதுக்கடையில் உள்ள பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிதாக விண்ணப்பிக்க வந்த இளம்வாக்காளர்களிடம் விண்ணப்பத்தை வாங்கி, பார்வையிட்டு அவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.


Next Story