போதை, உலக வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்


போதை, உலக வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்
x

ஒடுகத்தூரில் போதை மற்றும் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்து மினி மாரத்தான் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.

வேலூர்

மினி மாரத்தான்

உலக வெப்பமயமாதலை தடுக்க ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஆண்டு தோறும் மினி மாரத்தான் போட்டி நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் போதைப்பொருள், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.

இதனை வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், கோபிநாதன், பாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஏலகிரி, குடியாத்தம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பரிசு- சான்றிதழ்

ஒடுகத்தூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய மாரத்தான் ஆத்துமேடு, இசை நகர், வெங்கனப்பாளையம், சல்லாபுரியம்மன் கோவில் வழியாக குருவராஜபாளையம் வரை சென்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ2,500, இரண்டாவது பரிசு 1,500 என மொத்தம் 45 பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மூதாட்டிக்கு சிறப்பு பரிசு

இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஒடுகத்தூர் கிடங்கு தெருவை சேர்ந்த தெய்வானை (வயது 60) என்ற மூதாட்டியும் ஓடினார். அவருக்கு போட்டியின் நிறைவில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று 50 வயதுக்கு மேற்பட்ட பலரும் இந்த போட்டியில் மாணவர்களுடன் இணைந்து ஓடினர்.


Next Story