புதிய துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை; ராஜா எம்.எல்.ஏ. தகவல்


புதிய துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை; ராஜா எம்.எல்.ஏ. தகவல்
x

சங்கரன்கோவில் தொகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்து வருவதாக ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சங்கரன்கோவில் கோட்ட மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. சங்கரன்கோவில் மின்வாரிய கோட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சங்கரன்கோவில் தொகுதியில் மின்தேவையை பூர்த்தி செய்ய புதிய துணை மின் நிலையம் அமைக்க இடம் ஏற்பாடு செய்து தருமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய துணை மின்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மேலும் சங்கரன்கோவில் தொகுதியில் மின்வாரியம் மூலம் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் நிறைவுற்ற பணிகள் குறித்து அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார். தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், கிராமப்புற உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் ரவிராமதாஸ், மின்வாரிய குறைதீர்மன்ற உறுப்பினர் வக்கீல் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story