தமிழ்நாட்டில் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும் - போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால்


தமிழ்நாட்டில் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும் - போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால்
x
தினத்தந்தி 2 Aug 2023 4:30 AM IST (Updated: 2 Aug 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

போலீஸ் டி.ஜி.பி.

சென்னை ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி-அருங்கால் செல்லும் பாதையில் போலீசார் வாகன சோதனையின் போது, காரில் மோதி அரிவாளால் தாக்கிய 2 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதனுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. அவர் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் நேற்று நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். அப்போது தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பழனிவேல் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை

கூடுவாஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது சந்தேகத்திற்கு இடமாக அந்த பகுதியில் வந்த வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முற்பட்டுள்ளார். அதில் இருந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரை தாக்கினர். அவரை தைரியமாக எதிர்கொண்ட போலீசார் 'ஏ பிளஸ்' சரித்திர பதிவேடு குற்றவாளிகளை துப்பாக்கியால் சுடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் தற்போது நலமாக உள்ளார். தப்பி சென்ற இருவரின் மீதும் கொலை வழக்குகள் உள்ளது. அவர்கள் மீதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story