மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
படவேடு நட்சத்திரக்குன்று மலைப்பகுதியில் மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கண்ணமங்கலம்
படவேடு நட்சத்திரக்குன்று மலைப்பகுதியில் மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மரங்கள்
கண்ணமங்கலம் அருகே படவேடு ஊராட்சி சாமந்திபுரம் கிராமத்தில் நட்சத்திர குன்றுமலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்குன்று மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்துள்ளது.
இந்த மரங்களை சமீப காலமாக சில மர்மநபர்கள் வெட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.
பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கும் புவிவெப்பமடைவதை தடுக்கவும் மலைகளில் வளர்ந்துள்ள மரங்களே காரணமாக உள்ளன. அத்துடன் இயற்கையை காப்பதன்மூலம் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் வாழமுடியும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவே, மரங்களை வளர்த்து காப்பதன் மூலம் பறவைகள், வன உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவாக அமையும் என்றும், சமீப காலமாக இக்குன்றின்மீது வளர்ந்துள்ள மரங்களை வெட்டிக் கடத்துவதை ஊராட்சி நிர்வாகம் தடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என படவேடு பகுதியில் வசிக்கும் வரலாறு ஆய்வாளர் அமுல்ராஜ் உள்பட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வெட்டப்பட்டு வரும் மரங்களை உரிய முறையில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.