வரம்பு மீறிய செயல் ..! கவர்னர் பேச்சுக்கு திருச்சி சிவா எம்.பி கண்டனம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றபட்ட மசோதாவை கிடப்பில் போடுவது அல்லது செயல்படுவது வரம்புகளுக்கு மீறிய செயலாகும்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்திய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
அதில் பேசிய அவர் பேரவை தீர்மானங்களை கவர்னர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக நிராகரிப்பதாக பொருள். என தெரிவித்தார்.
இந்த நிலையில்கவர்னர் பேச்சுக்கு திருச்சி சிவா எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்,
அவர் பேட்டி அளித்த அவர் ,
குறிப்பிட்ட காலம் மட்டுமே கவர்னர் ஒரு மசோதாவை கையெழுத்து போடாமல் வைத்து கொள்ள முடியும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றபட்ட மசோதாவை கிடப்பில் போடுவது அல்லது செயல்படுவது வரம்புகளுக்கு மீறிய செயலாகும்.
ஒவ்வொரு மாநில அரசுகளும் , அவர்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்ள வழிவகை உள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது கவர்னரின் கடமை . என தெரிவித்தார்.
"ஆளுநர் ரவி வரம்பை மீறிவிட்டார்- வரலாற்றில் இதுவரை இப்படி நடந்ததில்லை" - திருச்சி சிவா கண்டனம்#TNGovernor #RNRavi #ThiruchiSiva #DMK https://t.co/lyG39UX5Bi
— Thanthi TV (@ThanthiTV) April 6, 2023