சாராயம் காய்ச்சுவோர் மீது நடவடிக்கை


சாராயம் காய்ச்சுவோர் மீது நடவடிக்கை
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவோர், விற்பனை மற்றும் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவோர், விற்பனை மற்றும் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

36 ப பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்வதை அடியோடு தடுக்கவும், சாராயம் அற்ற மாவட்டமாக மாற்றவும் மாவட்ட போலீஸ் சூபிரண்டு பாலாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பவர்கள், காய்ச்சுபவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த சாராயம் மற்றும் சாராய ஊறல் 10 ஆயிரம் லிட்டர் கைப்பற்றி அழிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

மாவட்டத்தில் சாராயம் விற்பது, காய்ச்சுவது மற்றும் கடத்தும் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் இதுவரை 24 சாராய குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இக்குற்றத்தில் ஈடுபட்டு தற்சமயம் மனம் திருந்தி வரும் நபர்களுக்கு மறு வாழ்விற்காக அரசு அளிக்கும் உதவித் தொகையை கலெக்டர் அலுவலகம் மூலமாகப் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும். மேலும் கிராம பகுதிகளில் சாராயம் தொடர்பாக பொதுமக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story