எடையளவு சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


எடையளவு சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் எடையளவு சட்டம், பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் 28 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

தென்காசி

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள திரவ எரிவாயு சிலிண்டர் (எல்.பி.ஜி) வினியோகம் செய்யும் கிடங்குகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் எடையளவு சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 10 நிறுவனங்கள் மற்றும் மறுபரிசீலனைச்சான்று வெளிக்காட்டி வைக்காத 10 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ், மோட்டல்கள், பஸ்நிலையங்கள் மற்றும் பஸ்நிறுத்தங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யும் பொட்டலப்பொருட்களில் தயாரிப்பாளர்களின் பெயர் மற்றும் முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 5 நிறுவனங்கள், பதிவுச்சான்று பெறாமல் விற்பனை செய்த ஒரு நிறுவனம் என 6 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.



Next Story