மாணவிகள் சாதனை
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர். கட்டுரை போட்டியில் முதுகலை இரண்டாமாண்டு கணிதவியல் துறை மாணவி பழனிபிரியா முதல் பரிசை பெற்றார். பேச்சு போட்டியில் முதுகலை இரண்டாமாண்டு மாணவி உமா தேவி முதல் பரிசும், முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி மூன்றாம் பரிசும் பெற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி முதல்வர் சின்னத்தாய் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பாராட்டி வாழ்த்தினர்.
Related Tags :
Next Story