வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி அச்சரப்பாக்கம் தபால் நிலையம் முற்றுகை


வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி அச்சரப்பாக்கம் தபால் நிலையம் முற்றுகை
x

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி அச்சரப்பாக்கம் தபால்நிலையம் முற்றுகையிடப்பட்டது.

செங்கல்பட்டு

இடஒதுக்கீடு வழங்கக்கோரி

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கம் பேரூராட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆணைக்கிணங்க மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனைப்படி அச்சரப்பாக்கம் தபால் நிலையத்தில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் பாரதிதாசன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பினர்.

முற்றுகை

அச்சரப்பாக்கம் தபால்நிலையத்தையும் முற்றுகையிட்டனர். அச்சரப்பாக்கம் பேரூர் நகர செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் ஏ.ஜி.குணசேகரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பிரதிநிதி ஷாஜகான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர், என்.ஏழுமலை, சி.எம்.ஏழுமலை, க.வே.பாபு, அர்ஜுனன், தர்மன், அம்பலவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காஜா மொய்தீன், கோவிந்தசாமி, நடராஜன், கிருஷ்ணன் ஆசிரியர், ஜாகிர்உசேன், சுப்பிரமணி ஆசிரியர் பாஸ்கரன், மகளிர் அணி வசந்தி, குப்பன், சதிஷ், சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story