குற்றாலம் அருவிகளில் குவிந்தசுற்றுலா பயணிகள்; நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
நீர்வரத்து குறைந்தது
குற்றாலத்தில் தற்போது குளுமையான சீசன் நிலவுகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகிறார்கள். வாரவிடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் குற்றாலத்தில் குவிந்தனர்.
கடந்த சில நாட்களாக போதிய மழை பெய்யாததால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து விட்டது. சாரல் மழையும் குறைந்து வெயில் அடித்தது.
உற்சாக குளியல்
எனினும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசைகளில் நீண்ட நேரம் நின்று உற்சாகமாக குளித்தனர்.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் பெண்கள் உடை மாற்றுவதற்கு அறைகள் உள்ளன. ஆனால் புலியருவியில் மட்டும் உடை மாற்றும் அறை இல்லை. எனவே அங்கு உடைமாற்றும் அறை அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.