விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்


விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை பள்ளிக்கூடத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சாா்பில் சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் தீபாவளி விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. தீயணைப்பு அலுவலா் முத்துசெல்வம் தலைமை தாங்கினார். குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய ஓட்டுனர் பாலசந்தா் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பட்டாசுகளை வெடிப்பது குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். பின்னர் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 12 விதிமுறைகள் கொண்ட விழிப்புணா்வு பிரசுரம் வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை அலுவலா்கள் பாலகிருஷ்ணன், மாடசாமி, உலகநாதன், சமுத்திரபாண்டி மற்றும் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியா் மாரிக்கனி நன்றி கூறினார்.


Next Story