திண்டிவனத்தில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டிவனத்தில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்் நடைபெற்றது.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக தீயணைப்பு துறை, திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு திண்டிவனம் நண்பர்கள் லயன் சங்க தலைவர் அருண் விஜி தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் அரிமா சங்க பால்பாண்டியன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது, அதிக சத்தம் ஏற்படும் வெடிகளை மருத்துவமனைகள் குழந்தைகள் நோயாளிகள் உள்ள இடங்களில் வெடிக்க கூடாது, குடிசை இல்லாத பகுதிகளில் வைத்து பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து பள்ளி மாணவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தப்பட்டது.
திண்டிவனம் இந்திரா காந்தி பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நேருவீதி வழியாக செஞ்சி பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் அப்துல் கலாம் நண்பர்கள் லியோ சங்க தலைவர் அதியமான், முன்னாள் மாவட்ட செயலாளர் மைனர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.