2 லாரிகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து


2 லாரிகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 10 Oct 2023 1:00 AM IST (Updated: 10 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே 2 லாரிகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு 10-க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை நாமக்கல்லை சேர்ந்த வினோத்குமார் என்பவர் ஓட்டினார். ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கோபசந்திரம் பகுதியில் வந்தபோது திடீரென லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் லாரி தறிகெட்டு ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த சமயம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு மற்றொரு லாரி வந்தது. அப்போது ஏற்கனவே மாடுகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து கிடப்பதை கவனிக்காத டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அந்த லாரியும் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி டிரைவர் மணிகண்டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவிழ்ந்து கிடந்த லாரிகளை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.


Next Story