கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 30 Sept 2023 12:30 AM IST (Updated: 30 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

கட்டிட தொழிலாளிகள்

கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டியம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 51). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி சாலையில் வேட்டியம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மல்லாபுரத்தை சேர்ந்தவர் சபரி (25). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி பெட்ரோல் பங்க் அருேக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சபரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் சபரி இறந்தார். மூர்த்தி படுகாயத்துடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டீக்கடை உரிமையாளர்

பாகலூர் அருகே உள்ள கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாஸ் (55). டீக்கடை வைத்து இருந்தார். இவர் பாகலூர்- சர்ஜாபுரம் சாலையில் கொத்தப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சங்கர் (42). இவர் காரில் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் மத்தூர் நேரு நகர் புதிய சுங்கச்சாவடி பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் கார் மீது மோதியது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story