துப்புரவு தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்பு
சுதந்திர தின விழாவில் துப்புரவு தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்பு
சிங்கம்புணரி
சுதந்திர தின விழாவில் துப்புரவு தொழிலாளர்கள் உறுதி ெமாழி ஏற்று கொண்டனர்.
உறுதிமொழி
சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத்தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியை மாற்றி தூய்மையாக வைத்திருக்க மன்ற தலைவர் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர குமார், ஒன்றிய உறுப்பினர்கள் கலைச்செல்வி அன்புச் செழியன், ரம்யா செல்வகுமார், உமா சோணமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார் மற்றும் அலுவலக மேலாளர் ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி அருகே குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி, சேவுகமூர்த்தி மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நீதிமன்றம்
திருப்புவனத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி குருலெட்சுமி தேசிய கொடி ஏற்றினார். அரசு வக்கீல் சுப்பராயன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறன் தேசியக்கொடியை ஏற்றினார். செயல் அலுவலர் ஜெயராஜ், துணைத்தலைவர் ரகமத்துல்லாகான் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் தலைவர் சின்னையா தேசிய கொடி ஏற்றினார். துணைத்தலைவர் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிநாதன், ராஜசேகரன் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அல்லிநகரம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் இந்திராகாந்தி சூரப்பராஜூ தேசியக்கொடி ஏற்றினார். இதில் கவுன்சிலர் இந்திராஜெயராஜ், ஊராட்சி செயலர் தண்டிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அரசிமுருகன் தேசிய கொடி ஏற்றினார். துணைத்தலைவர் ராஜலெட்சுமி மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சிந்திஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் வெங்டசுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.