தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

கொள்ளை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு அசோக்நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் என்ற குருவி சரவணன் (வயது 35). கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிலுவத்தூர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் இவர், நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்க முயன்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணக்குமாரை கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் சரவணக்குமார் சுற்றித்திரிவதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story