நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது


நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
x

ஆலங்குளம் அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் மாரிராஜ் (வயது 32). இவர் கடந்த 2015-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பாப்பாக்குடி போலீசார் நேற்று மாரிராஜை கைது செய்து பிடியாணையை நிறைவேற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story