தலைமறைவாக இருந்தவர் கைது
தலைமறைவாக இருந்தவர் கைது
கொல்லங்கோடு:
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரியாக சுகி பிரமிளா 2013-ம் ஆண்டு இருந்த போது, வள்ளவிளை மீனவ கிராமத்தில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய மண்எண்ணையை பதுக்கி, கேரளாவுக்கு கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வுக்கு சென்றார். அப்போது அவர் வாகனத்தை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கி, கொலை செய்ய முயன்றுள்ளனர். இது சம்பந்தமாக வட்ட வழங்கல் அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை குழித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான வள்ளவிளையை சேர்ந்த முகம்மது அசீம் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து முகம்மது அசீமை கொல்லங்கோடு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.