வாகனங்களில் கடத்திய 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வாகனங்களில் கடத்திய 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

கோபி அருகே வாகனங்களில் கடத்திய 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக டிரைவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

கடத்தூர்

கோபியை அடுத்த ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் கார் மற்றும் வேன் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே போலீசார் அந்த வாகனங்களை சோதனையிட்டனர். சோதனையின் போது அந்த 2 வாகனங்களிலும் பல்வேறு மூட்டைகளில் 3 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை பார்த்தனர்.

போலீசாரை கண்டதும் 2 வாகனங்களின் டிரைவர்களும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவரை போலீசார் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடினார். பின்னர் பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் நம்பியூரை சேர்ந்த பிரசாந்த் (வயது 27) என்பதும், சரக்கு வேனில் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும்,' தெரியவந்தது. இதையடுத்து 3 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி, வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட டிரைவர் பிரசாந்தையும் ஈரோடு உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரசாந்தை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story