அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
அம்பை:
அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஆடித்தபசுவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதைெயாட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்று மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகசுவாமிநாதன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், அம்பை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு விழா வருகிற 31-ந் தேதி மாலை நடைபெற இருக்கிறது. மேலும் மறுநாள் இரவு தெப்ப திருவிழா நடக்கிறது.