சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா 21-ந் தேதி தொடங்குகிறது


சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா 21-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 July 2023 12:30 AM IST (Updated: 21 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஆடித்தபசு திருவிழா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.

இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொடியேற்றம்

இந்த ஆண்டுக்கான திருவிழா 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்கிறார்கள்.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான 31-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி மற்றும் மண்டகப்படித்தாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story