திருமேனிநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா
திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சுழி,
திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடித்தபசு திருவிழா
திருச்சுழியில் திருமேனிநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, திருமேனிநாத சுவாமி மற்றும் துணைமாலை அம்மன் ஆகியோருக்கு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி வீதியுலா
பின்னர் திருமேனி நாத சுவாமி, துணைமாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் திருமேனிநாதர் சுவாமி மற்றும் துணைமாலை அம்மன் ஆகியோர் குதிரை வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் இரவில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 10-ந் தேதி மாலை 4 மணிக்கு மேல் திருமேனி நாதர் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு, திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் எழுந்தருளி துணைமாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.