சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா


சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா
x
தினத்தந்தி 23 July 2023 1:13 AM IST (Updated: 23 July 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா நடந்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா மோகனானந்த சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் காலையில் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் 501 பேர் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கரகம், மங்கள இசை, செண்டை மேளத்துடன் 1500 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலம் சிவகாளிபீடத்தை அடைந்ததும் கருவறையில் உள்ள சொர்ண காளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் 'அரோகரா...அரோகரா...' என முழங்கி அம்மனை வழிபட்டனர்.

விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். மேலும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ.,சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ.வான பிஆர். மனோகர், காவேரிப்பாக்கம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி (தெற்கு), தெய்வசிகாமணி (வடக்கு), காவேரிப்பாக்கம் நகர செயலாளர் பாஸ்நரசிம்மன், தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் குணா மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


Next Story