ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று கொடியேற்றம்


ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று கொடியேற்றம்
x
தினத்தந்தி 24 July 2022 6:21 AM IST (Updated: 24 July 2022 6:27 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற 24-ந் தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதையொட்டி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

28-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி, 30-ந் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது. விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


Next Story