ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ரத்தினகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூட்டுத்தாக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் கல்லூரி எதிரே சென்றபோது 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் காட்பாடி தாலுகா இளைய நல்லூரை அடுத்த வாணியகாட்டூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 35) இந்த வழக்கில் தலைமறைவானார். அவரை ரத்தினகிரி போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுேரசை ரத்தினகிரி போலீசார் கைது செய்து ஆற்காடு கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story