மது விற்ற வாலிபர் கைது
மது விற்ற வாலிபர் கைது
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி சோலூர் மட்டம் பகுதியில் சப் -இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்தில் கிடமான முறையில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஒசக்கீரி கிராமத்தை சேர்ந்த ராஜு (வயது 35) என்பதும், சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story