கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மகா சக்தி மாரியம்மன் கோவில் அருகில் கிணறு உள்ளது. கடந்த 19-ந் தேதியன்று மாலை அந்த கிணற்றில் வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அப்போது அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவரை கிணற்றில் இருந்து மீட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் திருச்சியை சேர்ந்த முருகன் (வயது 35) என்பதும், வாழ்க்கை மீது ஏற்பட்ட விரக்கியால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதும், மேலும் 2 எலிபேஸ்ட் பாக்கெட் வாங்கி சாப்பிட்டு உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
Reporter : V. MAGESH_Staff Reporter Location : Vellore - TIRUVANNAMALAI DEPOT