மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திண்டுக்கல்

நத்தம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (வயது 19). அதே பகுதியை சேர்ந்தவர் சங்கர். டிரைவர். இவர்கள் 2 பேரும் நெய் வாங்குவதற்காக இன்று மோட்டார் சைக்கிளில் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சங்கர் ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து வந்தார்.

நத்தம் அருகே எர்ரமநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் அவர்கள் வந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சங்கர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story