போடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


போடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 22 July 2023 2:30 AM IST (Updated: 22 July 2023 5:48 PM IST)
t-max-icont-min-icon

போடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

போடி சுப்புராஜ்நகர் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி விசாலாட்சி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் விசாலாட்சிக்கு கடந்த ஒருமாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார்.

ஆனாலும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் கடந்த 4 நாட்கள் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் பாப்பாத்தி வீட்டில் தங்கியிருந்தார். இதற்கிடையே நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது, விசாலாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story