தனிமையில் வசித்து வந்த பெண் தீக்குளித்து தற்கொலை


தனிமையில் வசித்து வந்த பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே தனிமையில் வசித்து வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே தனிமையில் வசித்து வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனியாக வசித்து வந்தார்

மார்த்தாண்டம் அருகே உள்ள பாளையங்கெட்டி பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவருடைய மனைவி பேபி (வயது 57). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. பேபியின் கணவர் நேசமணி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும், குடும்ப செலவிற்காக பேபி அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்று வந் தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பேபி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. தனியாக வசித்து வந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்ததால் பேபிக்கு சிறது மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பேபியின் வீட்டிலிருந்து துர்நாற்றமும், புகைமூட்டமாகவும் காணப்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்ற பார்த்தனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து இதுபற்றி குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பேபியின் உடல் தீயில் கருகிய நிலையில் எரிந்து கொண்டிருந்தது. உடனே, தீயணைப்பு வீரர்கள் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

வீட்டில் தனியாக வசித்து வந்த பேபி வாழ்க்கையில் வெறுப்படைத்து உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story