தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்


தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
x

தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா மாவூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மனைவி பெத்தி (வயது 48). இவர் தனது கிராமத்தில் குலதெய்வ கோவிலில் தன்னை மட்டும் ஒதுக்கி விட்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர். வரி வாங்கி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தாலுகா அலுவலக வாசலில் தீக்குளிக்க போவதாக கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன் பார்த்திபன் கொண்டு வந்த மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவில் கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பாக நில அளவை செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே நில அளவை செய்த பின்பு கோவில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் வரி வசூல் அனைவரிடம் பெறுவது தொடர்பாக பின்னர் பேசிமுடிவு செய்யப்படும் என்றும் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடையாக பெத்தியிடம் ரூ.1001 தாசில்தார் முன்னிலையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பெத்தி கலந்து கொண்டு சாமி கும்பிடலாம், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இருதரப்பினரும் சமாதான கூட்டத்தில் முடிவுகளை ஏற்றுக் கொண்டு சென்றனர்.


Next Story