ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானை
பந்தலூர் அருகே ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி
பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு புல்லட் என்று அழைக்கப்படும் காட்டு யானை புகுந்தது. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையின் இரும்பு கதவை உடைத்தது. பின்னர் தும்பிக்கையை விட்டு சர்க்கரை, அரிசி மூட்டைகளை தூக்கி வெளியே வீசியது. தொடர்ந்து ரேஷன் அரிசி, சர்க்கரையை யானை தின்றது. இதைத்தொடர்ந்து ஒரு மூட்டை அரிசியை தும்பிக்கையால் தூக்கிய படி காட்டு யானை சாலையில் சென்றது. பின்னர் அப்பகுதியில் மளிகை கடை கதவை உடைத்தது. தகவல் அறிந்த தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story