கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்


கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்
x

ேவட்டைக்காரனிருப்பு பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என கீழையூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

ேவட்டைக்காரனிருப்பு பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என கீைழயூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

கீழையூர் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழுத்தலைவர் செல்வராணி ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் சவுரிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

செல்வம் (இ.கம்யூ):- கீழையூர் ஒன்றிய பகுதிகளுக்கான உதவி செயற்பொறியாளர் அலுவலகம் நாகையில் ஊரக வளர்ச்சித் துறையில் இயங்கி வந்தது.இந்த அலுவலகம் தற்போது வேதாரண்யத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் நாகையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணை

ஆறுமுகம்(பா.ஜ.க.):- வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் பிரதாபராமபுத்திரத்தில் உள்ள வாய்க்கால்களில் மழை நீர் தேங்கும். இதனால் கடல் முகத்துவாரத்தில் இருந்து கடல்நீர் உட்புகுந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அதனால் வாய்க்கால்களின் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். காமேஸ்வரத்தில் தினசரி காய்கறி சந்தை அமைக்க வேண்டும்.

ஒன்றியக்குழு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இதனால் துறை சார்ந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடியவில்லை. வரும் கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.

புறக்காவல் நிலையம்

சரண்யா (தி.மு.க):- சோழ வித்தியாபுரத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

சுதா (தி.மு.க.):- வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனை தடுக்க டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழிசைவல்லபி(அ.தி. மு.க):- விழுந்தமாவடி, காமேஸ்வரம், பிரதாபராமபுரம், திருப்பூண்டி, கீழப்பிடாகை, காரப்பிடாகை வடக்கு, தெற்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க எடுக்கவேண்டும்.

கால்நடை ஆஸ்பத்திரி

நாகரெத்தினம் (தி.மு.க.):- புதுப்பள்ளி ஊராட்சியில் புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் அமைக்க வேண்டும். வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நிரந்தரமாக கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.

சுப்பிரமணியன்(அ.தி.மு.க.):-கீழையூரில் இருந்து தெற்குவெளி வழியாக திருக்குவளைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

செல்வராணி ஞானசேகரன்(தலைவர்):- நிதிநிலைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story