காதல் கணவருடன் பல்கலைக்கழக மாணவி கடலூா் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்


காதல் கணவருடன் பல்கலைக்கழக மாணவி கடலூா் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்
x

காதல் கணவருடன் பல்கலைக்கழக மாணவி கடலூா் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

கடலூர்

சிதம்பரம் கொத்தங்குடிதெருவை சேர்ந்தவர் அசோக்குமார் மகள் சுவேதா (வயது 23). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. தாவரவியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் மகன் ராஜ்குமார் (26) என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

பின்னர் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராஜ்குமாரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதை அறிந்த எனது பெற்றோர் என்னை அடித்து துன்புறுத்தி வந்தனர். திருமணத்திற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் நான் கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாருடன் சென்று விட்டேன்.

பின்னர் சென்னையில் 16-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டோம். இதை அறிந்த எனது பெற்றோர் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். ஆகவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story