பள்ளத்தில் கவிழ்ந்த லாரி


பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
x

பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

திருச்சி

சமயபுரம்:

பெரம்பலூரில் இருந்து மொலாசிஸ் என்ற கழிவினை ஏற்றுக்கொண்டு ஒரு டேங்கர் லாரி லால்குடி அருகே உள்ள காட்டூர் சர்க்கரை ஆலைக்கு நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் இருந்து லால்குடி செல்லும் பிரிவு ரோட்டில் வந்தபோது, அப்பகுதியில் பொதுப்பணித்துறையினரால் வெட்டப்பட்ட பெரிய பள்ளத்தில் அந்த லாரி கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து கிரேன் மூலம் அந்த லாரி மீட்கப்பட்டது. பின்னர் மாற்று வாகனத்தில் கழிவுகளை ஏற்றிக்கொண்டு காட்டூருக்கு டிரைவர் ஓட்டிச்சென்றார். இதற்கிடையே அந்த பள்ளத்தில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், நடந்து செல்பவர்கள் விழுந்து விடும் நிலை உள்ளது. அங்கு பள்ளம் உள்ளதை அந்த வழியாக வருபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இதுபோன்று விபத்துகள் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story