மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிஐ.டி. நிறுவன ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிஐ.டி. நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

ஆலங்குளம்:

நெல்லை ஆசாத் நகரை சேர்ந்தவர் லட்சுமணசாமி மகன் திருக்குமரன் (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருக்குமரன் தனது நண்பரை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சரக்கு ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் திருக்குமரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று, திருக்குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மேல கடையநல்லூர் திருவேங்டநாதபுரத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் கதிரவனிடம் (33) விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story