நாமக்கல் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


நாமக்கல் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

நாமக்கல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் - திருச்சி சாலை குப்பம்பாளையம் பிரிவு அருகே சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் பலத்த காற்று வீசியதால் திடீரென ஒரு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் தீயணைப்புத்துறை வீரர்கள் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்று மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு மரக்கிளைகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.


Next Story