குமரியில் பிடிபட்ட புலி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடைப்பு
சென்னை
சென்னை,
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர்கள் குடியிருப்பு, மல்லன்முத்தன்கரை, மோதிரமலை மூக்கறைக்கல், வட்டப்பாறை புறத்திமலை, பத்துகாணி ஒருநூறாம்வயல் பழங்குடி குடியிருப்புகளில் கடந்த 1 மாத காலத்திற்கு மேலாக ஒரு புலி ஆடு, மாடுகளை அடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சி எடுத்து நேற்று முன்தினம் பத்துகாணி கல்லறைவயல் என்ற இடத்தில் வைத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை பலத்த பாதுகாப்புடன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொண்டு வந்து சேர்த்தனர். பூங்காவில் உள்ள காட்சி அறையில் அந்த புலி அடைக்கப்பட்டுள்ளது. தற்போது அது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story