ஆட்டுப்பண்ணையில் பயங்கர தீவிபத்து
நாட்டறம்பள்ளி அருகே ஆட்டுப்பண்ணையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே ஆட்டுப்பண்ணையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி வெற்றிச்செல்வி (வயது 51). இவர் சொந்தமான 70 ஆடுகள், 30 மாடுகள் வைத்து ஆடு மாடுகள் பண்ணை நடத்தி வருகிறார். இவர்கள் சென்னையில் தங்கி வருகின்றனர். இவர்களது உறவினர் ஆட்டுப்பண்ணையை கவனித்து வருகிறார்.
நிலையில் நேற்று ஆட்டு பண்ணைக்கு அருகாமையில் உள்ள மின் கம்பத்திலிருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பண்ணை முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. உடனடியாக பண்ணையில் இருந்து ஆடுகள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்தினர் இதனால் ஆடுகள் மற்றும் மாடுகளை எந்த வித காயமின்றி உயிர் தப்பியது. தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.