புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்; அமைச்சர் துரைமுருகன் பேட்டி


புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்; அமைச்சர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 18 Oct 2023 7:02 PM IST (Updated: 18 Oct 2023 8:00 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

காட்பாடியில் புதிய மேம்பாலம் அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அருகே உள்ள பரமசாத்து என்ற இடத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.18 கோடியில் புதிய சிறுதடுப்பணை கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறுதடுப்பணை கட்டும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் சோளிங்கர்-சித்தூர் சாலையில் அமைக்கப்படும் புதிய மேம்பால கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் மேல்பாடி பகுதியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.13 கோடியில் அமைக்கப்பட்டு வரும் தரை பாலத்தையும், குகையநல்லூர் பகுதியில் பொன்னையாற்றின் குறுக்கே ரூ.11½ கோடியில் தடுப்பணை கட்டும் பணிகளையும் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

டெண்டர் விடப்படும்

அதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், பொன்னை மேம்பாலம் பணிகள் இன்னும் 3 மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும். காட்பாடியில் புதிய மேம்பாலம் அமைக்க விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது' என்றார்.

ஆய்வின் போது துரை சிங்காரம், சிறப்பு தலைமை பொறியாளர் சண்முகம், செயற் பொறியாளர் ரமேஷ், உதவி செயற் பொறியாளர் கோபி மற்றும் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


Next Story