தொழிலாளி வீட்டில் திருடிய வாலிபர் சிக்கினார்


தொழிலாளி வீட்டில் திருடிய வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 26 Sept 2023 4:15 AM IST (Updated: 26 Sept 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தொழிலாளி வீட்டில் திருடிய வாலிபர் சிக்கினார்

தேனி

கூடலூர் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜீவகன் (வயது 38). கூலித்தொழிலாளி. கடந்த 22-ந்தேதி இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது மனைவியும் தோட்டத்துக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே ஜீவகனின் வீட்டிற்கு, அவரது அக்காள் மகன் வைரவன் என்பவர் வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஜீவகனின் மனைவிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.9 ஆயிரத்து 950 மற்றும் வீட்டு பத்திர நகல் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (32) என்பவர் ஜீவகனின் வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story