கல்குவாரி குட்டையில் மூழ்கிய வாலிபர்
வாணாபுரம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
கல்குவாரி குட்டையில் மூழ்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரம் கோணத்தன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் எட்வின்அந்தோணி (வயது 18), பள்ளி படிப்பை முடித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில்இன்று எட்வின்அந்தோணி நண்பர்களுடன் வாணாபுரம் அருகே உள்ள தொண்டமானூரில் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றார்.
அங்கு குளித்துக் கொண்டிருந்த எட்வின் அந்தோணி திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
தேடுதல் வேட்டை
இதுகுறித்து தகவல் அறிந்தவாணாபுரம் போலீசார் மற்றும் தண்டராம்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கல்குவாரி குட்டையில் தேடினர். மேலும் இரவு நேரம் என்பதால் அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
கல்குவாரி குட்டை ஆழமான பகுதி என்பதால் அவர் தண்ணீரில் மூழ்கினாரா? அவரின் கதி என்ன என்று போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.