வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது
பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி, பூபால சமுத்திரபுரம் தெருவில் வசித்து வருபவர் செல்லையா மனைவி நாராயண வடிவு (வயது 42), பீடி சுற்றும் தொழிலாளி. இவர் கடந்த 28-ந் தேதி இரவு அருகில் உள்ள வீட்டில் பீடி சுற்ற சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சிவா (23) என்பவர், நாராயண வடிவு வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த கம்மல், காதுமாட்டி மற்றும் மோதிரம் 2, வெள்ளிக்கொடி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக நாராயண வடிவு பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சிவாவை நேற்று முன்தினம் கைது செய்து அவரிடம் இருந்து திருட்டுப் போன பொருட்களை மீட்டனர்.
Related Tags :
Next Story