பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடிக்க முயன்ற வாலிபர் கைது


பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடிக்க முயன்ற வாலிபர் கைது
x

நெல்லை அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் ஜோசப் மகன் அருண் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் இளம்பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் படம் பிடிக்க முயன்றாராம். இதனை அறிந்த அந்த பெண் அருணிடம் தகராறு செய்தார். அப்போது அந்த பெண்ணிற்கு அருண் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி விசாரணை நடத்தி அருணை கைது செய்தார்.


Next Story