பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
பாவூர்சத்திரம் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே நாகல்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மருதையா மகன் விஜயகுமார் (வயது 24). இவர் கேரள மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். சொந்த ஊரில் நடந்த கோவில் கொடை விழாவில் பங்கேற்பதற்காக வந்த விஜயகுமார் நேற்று முன்தினம் மாலையில் ஊர் அருகே உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்கு ஏறினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story