மருதையாறு வடிநில கோட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


மருதையாறு வடிநில கோட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:23 AM IST (Updated: 8 Feb 2023 12:33 AM IST)
t-max-icont-min-icon

மருதையாறு வடிநில கோட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மருதையாறு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், உலக வங்கியின் ரூ.9 கோடி நிதி உதவியுடன் அரியலூர் மருதையாறு வடிநில கோட்டத்தில் உள்ள சுக்கிரன் ஏரி மற்றும் தூத்தூர் ஏரியில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்த கண்காணிக்கும் குழுவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரிய பணிகள், ஏரியின் கரைகளை பலப்படுத்திய பணிகள், பாசன மதகுகளை சீர் செய்த பணிகள், ஏரி பாசன வாய்க்கால்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மருதையாறு வடிநில கோட்டத்தில் 560 விவசாயிகள் ஒன்று சேர்ந்த விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) மற்றும் நாளையும்(வியாழக்கிழமை) நேரடியாக ஏரியில் நடைபெற்று முடிந்த பணிகளை ஆய்வு செய்து, அங்குள்ள விவசாயிகளை சந்தித்து கலந்துரையாட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழக நீர் மேலாண்மை இயக்குனர் மாதவி கணேசன் கலந்து கொண்டு, திட்டம் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பணிகளை முழுமையாக செய்தால் மட்டுமே பொதுமக்கள் பலன் பெறுவார்கள். எனவே திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும், என்றார். கூட்டத்தில் திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு திட்டம் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story